மதுரை சித்திரை தேரோட்டத்தில் கூட்டநெரிசலை பயன்படுத்தி தனியாக வந்த மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்துவருகின்றார்.
மதுரை மீனாட்சி அம்மன்சித்திரை திருவிழாவை ஒட்டி நேற்று மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.அப்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வீடியோ வெளிவந்து ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் கூட்டத்தில் நின்றுகொண்டிக்கும் ஒரு மூதாட்டியின் கழுத்திலுள்ள நகையை லாவகமாக பறிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. பக்தர் ஒருவரின் மொபைலில் பதிவானஇந்த வீடியோ காட்சியை ஆதாரமாக வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட அந்த நபர் யார் எனபோலீசார்தேடிவருகின்றனர்.