Advertisment

வெளியான பள்ளிக் குழந்தைகளின் வீடியோ; ஆசிரியர் போக்சோவில் கைது

Video recording of school children talking inappropriately; Teacher arrested in Pocso

Advertisment

நெல்லையில் பள்ளிக்குழந்தைகளை தவறான முறையில் பேச வைத்து ஆசிரியர் வீடியோ வெளியிட்டதாகப் புகார் எழுந்த நிலையில், தற்போது வீடியோவை வெளியிட்ட ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அரசுப் பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் மட்டும் வேலை பார்த்து வருகின்றனர். இதில் மங்களம் என்ற ஆசிரியருக்கு மற்றொரு ஆசிரியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவதூறு பரப்பும் நோக்கில்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் தவறான விஷயத்தை தெரிவித்து பாலியல் ரீதியாகப் பேச வைத்து அதை வீடியோவாகப் பதிவு செய்து ஆசிரியர் மங்களம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் வலைத் தளங்களில் வைரலான நிலையில், அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினர்கள் மூலமாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் மங்களம் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வித்துறை சார்பாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

police nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe