4 pound jewelery flush with girl! Video of trying to catch   robbers ..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவர் பலசரக்கு கடை நடத்திவருகிறார். இவர், தனது மனைவி செல்வியுடன் திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் திண்டுக்கல் சாலையில் சித்தையன்கோட்டை பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த 3 இளைஞர்கள் செல்வியின் கழுத்திலிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைத் திடீரென பறித்தனர்.

Advertisment

கண்ணிமைக்கும் நேரத்தில் மூவரும் பைக்கில் திண்டுக்கல் சாலையில் தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தின்போது பின்னால் காரில் வந்துகொண்டிருந்தவர்கள், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பைக் கொள்ளையர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். சினிமா சேசிங் போல் பைக்கில் அதிவேகமாக சென்ற கொள்ளையர்கள், காரில் வந்தவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடினர். இச்சம்பவம் தொடர்பாக செல்வி அளித்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், கொள்ளையர்களைப் பிடிக்க காரில் விரட்டி வந்தவர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்து பட்டிவீரன்பட்டி போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Advertisment