“குயில புடிச்சி கூண்டில் அடச்சி... பாடலாமா சார்” - மனோபாலாவின் கடைசி வீடியோ!!

A video of Manopala enjoying her son Harish's singing has been released

மனோபாலா இறுதியாகத்தனது மகன் ஹரீஷ் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா(03.05.2023) உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விஜயகாந்த், சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினி, கமல் தொடங்கி கார்த்தி, ஜெயம் ரவி என பல்வேறு திரைப் பிரபலங்களும் சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலத்தில் அதிகமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மனோபாலாவிற்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.

இந்நிலையில் மனோபாலா சிகிச்சையில் இருந்தபோது அவரது மகன் ஹரீஷ் மனோபாலாவிடம் பாடல் பாடி அவரை உற்சாகப்படுத்தும் வீடியோ style="color:#c0392b;">Manobala's Waste paper என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில் அருகில் இருப்பவர்கள் மனோபாலாவிடம், “சார் நீங்கள் ஒரு பாட்டு பாடுங்க சார். நீங்கள் ஆரம்பிங்க நான் பாடுகிறேன். குயில பிடிச்சு கூண்டில் அடச்சி பாடலாமா....” எனக் கேட்கிறார். தொடர்ந்து அவரது மகன் ஹரீஷ் பாடுகிறார். மகன் ஹரீஷ் பாடுகையில் அருகில் இருப்பவர் மனோபாலாவிற்கு உணவினை ஊட்டி விடுகிறார். இணையத்தில் இந்த வீடியோ வேகமாகப் பகிரப்படுகிறது.

manobala
இதையும் படியுங்கள்
Subscribe