Advertisment

காவல் நிலையத்தில் புகுந்து திருநங்கை தகராறு-வைரலாகும் வீடியோ காட்சி!

 Video footage of a transgender man entering a police station and arguing-viral!

சென்னையில் காவல்நிலையத்தில் புகுந்து திருநங்கை ஒருவர் தகராறு செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Advertisment

சென்னை பாண்டிபஜார் பகுதியில் வசித்து வந்த திருநங்கை ஒருவர் இருசக்கர வந்துகொண்டிருந்த நிலையில் அவர் வந்த வாகனத்தின் பதிவெண் 'G' என ஆரம்பிக்கும் வகையில் இருந்துள்ளது. அரசு வாகனங்களுக்கு மட்டுமே பதிவெண் 'G' என்று ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் அதுகுறித்து திருநங்கையிடம் போலீசார் விசாரித்துள்ளனர். இதற்கு முன்பே பலமுறை இதே காரணத்திற்காக போலீசார் திருநங்கையை எச்சரித்திருந்ததாகவும் கூறப்படுகிற நிலையில் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து காவல்நிலையம் வந்துள்ளனர்.

Advertisment

இதனால் காவல்நிலையத்திற்கு வந்த அந்த திருநங்கை காவல் நிலையத்தில் புகுந்து தகராறு செய்ததோடு அங்கிருந்த காவலர்களை ஆபாசமாக பேசியுள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்த காவலர் ஒருவர் மொபைல் போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

Chennai police Transgender
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe