கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்துள்ள கவுண்டப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவரது மகன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறான். கணவனை இழந்து வாழும் சாவித்திரி கள்ளத்தனமாக மது விற்று வரும் நிலையில் அண்மையில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் கள்ள மதுவிற்பனை தொடர்பாக போலீசார் அடிக்கடி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதால் சாவித்திரி பள்ளியில் பயின்று வரும் தனது 7 வயது மகனை மதுவிற்பனையில் ஈடுபடுத்தியுள்ளார். இந்நிலையில் சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்டபோது எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் தாயும் மகனும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.