Published on 09/06/2021 | Edited on 09/06/2021

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (08/06/2021) கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் இருந்து அதிகாரிகளுடன் குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு குறித்து காணொளி காட்சி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் குறுவை சாகுபடிக்கு தேவையான உரம் இருப்பு, திட்டங்கள், தண்ணீர் தேவை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி மற்றும் உயர் அலுவலர்கள், அனைத்து மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.