Skip to main content

நெய்வேலியில் கஞ்சா வியாபாரி காவல்துறைக்கு வீடியோவில் சவால்!!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்று வட்டார பகுதிகளில்  அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. 

இதனை  காவல்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து தடுத்து வரும் நிலையில், கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர் தான் கஞ்சா விற்பதாகவும், தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் வீடியோவில் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 

அந்த வீடியோவில், 

 

 Video challenge to cannabis businessman in Neyveli


"நான் பெங்களூர் மணி என்ற மணிகண்டன்  பேசுகிறேன். நான் தற்போது நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறேன். இதனை தடுக்க நினைக்கும் சுரேஷ் என்பவரை கொலை செய்யப்போகிறேன். போலிசார் என்னை கைது செய்யமுடியுமா?" என கேள்வி எழுப்பியதுடன், கஞ்சா விற்றவர் மற்றும் கஞ்சா பயன்படுத்துபவர் என அனைவரும் சேர்ந்து எடுத்த  வீடியோ தற்போது அதிகளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  பரவி வருகிறது.

இவ்வீடியோவில் பேசுபவர் பெங்களூரை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன்  என்றும், இவர் நெய்வேலி மந்தாரகுப்பத்தில் உள்ள ஒம் சக்தி நகரை சேர்ந்த பெண்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரிலிருந்து  நெய்வேலி வரும் போது, கஞ்சா பொட்டலங்களை எடுத்துவந்து, தன்னுடைய சக நண்பர்களான தேவா உள்ளிட்டவர்களுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் என்பவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது சக நண்பர்களுடன் கடந்த ஏப்ரல் மாதம் கஞ்சா போதையில் காவல்துறைக்கு சவால் விடும் வீடியோவை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த நெய்வேலி  காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்த வீடியோ  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.