Skip to main content

‘ஈஷாவுக்கு வந்தேன்.. மாட்டிக்கிட்டேன்..’ - இளம் நடிகையின் வீடியோ வைரல்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

video actress visiting Isha Center Coimbatore with her boyfriend going viral.

 

யாராச்சும் காப்பாத்துங்க.. என்கிட்டே இவன் தப்பா நடக்க ட்ரை பண்றான்.. என முகத்தில் காயங்களுடன் நடுரோட்டில் இறங்கி துணை நடிகை ஒருவர் கூச்சலிடும் வீடியோ காட்சிகள் மதுரையில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலை அருகே உள்ளது நேரு நகர் பிரதான சாலை. இங்கு வந்த இளம் ஜோடி சொகுசு காரின் உள்ளே இருந்தபடி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் இந்தியில் பேசிக்கொண்டு அடித்துக் கொண்டதை அப்பகுதியில் இருந்த மக்கள் கவனித்துள்ளனர். ஆரம்பத்தில், ஏதோ தனிப்பட்ட விவகாரம் என நினைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போயுள்ளனர். ஆனால், அடிதடியும் சத்தமும் அதிகரிக்கவே, கார் கதவை திறக்கச் சொல்லி என்ன பிரச்னை என மதுரை தமிழில் கேட்டுள்ளனர். அப்போது அந்த பெண் துணை நடிகை என்றும், அந்த இளைஞர் தன்னை வழக்கறிஞர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். 

 

“எதுவா இருந்தாலும் உங்க வீட்டுக்கு போய் பேசிக்கொள்ளுங்கள்.. இது பொதுவான இடம்.. இங்கே வைத்துக் கொள்ளாதீர்கள்” என எச்சரித்துள்ளனர். ஆனால், அந்த இளம் ஜோடியோ, ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் மழை பொழிந்துள்ளனர். இது என்னப்பா.. பெரிய சிக்கலா இருக்கும் போலவே என நினைத்த மக்கள், உடனடியாக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில், “உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியா மகள் அங்கீதா பட்டாச்சாரியாதான் இந்த பெண் என்பதும், அவர் துணை நடிகையாக இருந்து வருவதும் தெரியவந்தது. அதேபோல, உடனிருந்த இளைஞர் பீகார் மாநிலம் ராம்நகர் வெஸ்ட் பகுதியை சேர்ந்த மனோஜ் பாண்டேவின் மகனான நிதிஷ்குமார் என்பதும் தெரியவந்தது. மும்பையில் இருந்து இருவரும் மகா சிவராத்திரி திருவிழாவிற்காக கோவையில் நடைபெற்ற ஈஷா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து கோவையில் வாடகை கார் எடுத்து இருவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்க்க திட்டமிட்டு நேற்று மதுரையில் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறுதான் ரோட்டில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு வந்ததும் தெரியவந்தது. எதனால் தகராறு வந்தது என போலீசார் இருவரிடம் விசாரணை செய்ததில், “நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்தோம். ஆனால், தனது ஆண் நண்பர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்றும், அதோடு தனது பணத்தையும் எடுத்து கொண்டதாகவும் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறினார். பதிலுக்கு அந்த இளைஞரும் இவள் தவறான பெண் எனக் கூறினார். இருவரையும் விசாரணை செய்த காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன், இருவரிடமும் உடனடியாக தங்களது சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மும்பையில் இருந்து மதுரை வந்து ரோட்டில் நின்று சண்டையிட்ட துணை நடிகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நியோ மேக்ஸ் மோசடி வழக்கு; காவல்துறையினருக்கு நீதிமன்றம் கெடு!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Court time for the police for Neo Max Fraud Case

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், சிலருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆகின. 

இந்த வழக்குகள் அனைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தண்டபானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘நிதி நிறுவனங்களில் ஆசை வார்த்தையை நம்பி 3.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், 11,709 பேர் மட்டுமே தங்களுடைய முதலீட்டுகளை திரும்ப பெற்றிருக்கிறார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். தங்களிடம் முதலீடு செய்தவர்களின் விபரங்கள், முதலீடு செய்யப்பட்ட தொகை, நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், சொத்துக்கள் ஆகிய முழு விவரங்களையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் வழங்க வேண்டும். 

அதே போல், பாதிக்கப்பட்டவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக முழுவதுமாக அறியும் வகையிலும், மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யும் விதமாகவும் பரந்த அளவில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்களை பெறுவதில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முனைப்பு காட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து புகார்களை பெற்று, இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடித்து 15 மாதங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கப்பலூர் சுங்கச்சாவடி போராட்டம் வாபஸ்!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Withdrawal of the struggle for madurai kappalur toll plaza issue
கோப்புப்படம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் புதிய சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் தோறும் 340 ரூபாய் கட்டணம் இன்று (10.07.2024) முதல் அமலாவதை எதிர்த்து இந்த போராட்டத்தை அதிமுக நடத்தியது. அதிமுகவினர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாகச் சென்றன. கப்பலூர் பகுதியில் இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Withdrawal of the struggle for madurai kappalur toll plaza issue

இதற்கிடையே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் முன் அமர்ந்து பழைய முறையே தொடரும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என கல்லுப்பட்டி பேரையூர் வாகன ஓட்டிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும் கிராம மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார். அதே சமயம் போராட்டக்காரர்களைக் கலைக்க 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சுங்கச்சாவடியில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை உள்ளூர் மக்களுக்கு டோல்கேட் கட்டண விலக்கு அளிக்கப்படும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து சுமார் 10 மணி நேரமாக நடைபெற்று வந்த கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை (15.07.2024) பேச்சுவார்த்தை நடத்துவதாக போலீசார் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெறுவதாகப் போராட்டக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் வாபஸ் பெற்றுக் கலைந்து சென்றனர்.