Victory face in Tuticorin; Kanimozhi to become MP again?

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

Advertisment

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 2.30 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 298 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 228 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Advertisment

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 39 இடங்களில் திமுக கூட்டணியும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றிமுகம் கண்டுள்ளார். ஏற்கனவே அவர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 2,89,925 வாக்குகள் பெற்று தொடர்ந்து வெற்றி முகத்தில் உள்ளார்.