publive-image

ஆன்லைன் ரம்மிக்கு எதிரான அவசரச்சட்டம் எடப்பாடிக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''இன்று தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அவசர தடைச் சட்டம் வந்ததற்கு காரணம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் குறித்து தெரிவித்தோம். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில், ஊடகங்களில் ஆன்லைன் சூதாட்டத்தால் பொருளை இழந்து, பணத்தை இழந்து, தன்னுடைய பொருளாதாரத்தையும், வாழ்க்கையும் இழந்து உயிரிழக்கும் சம்பவம் வராத நாட்களே கிடையாது என்ற அளவில், இந்த அவல நிலையை, இந்த அதிர்ச்சிகரமான தகவல்களை தொடர்ந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று எடப்பாடி பழனிசாமி இன்று வெற்றி பெற்றிருக்கிறார்.

Advertisment

இதை நிரந்தர சட்டமாக்குவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். தமிழகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்ளடக்கிய தென் மண்டலங்களில் அதிகம் உள்ளது. 6095 வழக்குகள் என்பது மிக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரமாக இருக்கிறது. சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது தென் மாவட்டங்களில் இன்றைக்கு அதிகமாக இருக்கிறது என்பது வேதனையானது. இதற்கு பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது'' என்றார்.