Advertisment

கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்கலாம்... சி.பி.சி.ஐ.டி எண்கள் அறிவிப்பு! 

Victims of Kepraj can report ... CPCID Numbers Announcement!

சென்னை கே.கே.நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு ராஜகோபாலன் என்ற ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகார் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்துவரும் நிலையில், கைது நடவடிக்கையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Advertisment

சென்னையில் தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றிய கெபிராஜ், தன்னிடம் தற்காப்பு கலையைக் கற்றுக்கொள்ளவந்த மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9498143691 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது atccbcid@gmail.com என்ற ஐ.டியிலோ புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் மீது புகார் அளிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

CBCID INVESTIGATION sexual harassment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe