சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சாமி தரிசனம் செய்ய புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு வந்தார். இதனைத்தொடர்ந்து அவர் கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். இவரை நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.
இவர் வருகையை ஒட்டி சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர்பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் கோவிலுக்கு பக்தர்கள் யாரையும் காலை 7:00 மணி முதல் அனுமதிக்கவில்லை. இதனால், அனைவரும் அந்தந்தப் பகுதியில் பொதுமக்களைக் காவல்துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாகத்தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.