/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/new-web-annamalai-univ.jpg)
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பு கல்லூரிகளுக்கான புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் கலந்துகொண்டு www.aucoeexam.in என்ற புதிய இணையதளத்தை துவக்கி வைத்தார்.
இதில் பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், கல்லூரி வளர்ச்சி கவுன்சில் முதல்வர் வசந்தராணி, புல முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த இணையதளம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 75 இணைப்புக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பெரிதும் துணை புரியும்.
இதன் வாயிலாக உறுப்புக் கல்லூரிகள் தகவல்களைப் பதிவேற்றம் செய்யவும், செய்முறை மதிப்பெண்களுக்கான உரிய படிவத்தைச் சமர்ப்பிக்கவும், தேர்வு அனுமதிச் சீட்டு பெறவும், தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். மேலும் இந்தப் புதிய இணையதளம் இணைய வழியில் தேர்வுகள் நடத்தவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)