Advertisment

“வி.ஜி.பி. கட்டுமான குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பண மோசடி செய்தார்” -   கிருஷ்ணா ராவ்

publive-image

Advertisment

பிரபல தொழிலதிபர் விஜி பன்னீர்தாஸின் மகனும், வி.ஜி.பி. குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பாபு தாஸ் மீது சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கிருஷ்ணா ராவ் என்பவர் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு பாபு தாஸ், தன்னிடம் பெற்ற ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாகக் கூறி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. மேலும், அவரது புகார் மனுப் பற்றியும் தெரிவித்தார்.

அந்தப் புகார் மனுவில், பாபு தாஸ் மற்றும் பி.என்.பி. நிறுவனத்தினரும் இணைந்த தன்னிடம் இருந்து ஒரு கோடியே 80 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை. அதேபோல், இந்தப் பணத்திற்காக அவர்கள் கொடுத்த ஆவணங்கள் தற்போது வேறு ஒருவர் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக காவல்துறையிடம் இந்தப் புகார் மனுவை அளித்து அங்குச் சரியான நடவடிக்கை இல்லையென, நீதிமன்றத்தை நாட;நீதிமன்றம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கட்டும் என அறிவுறுத்தியது. அதையடுத்து சென்னை சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையில் உள்ள பாபு தாஸ் வீட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

Chennai police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe