mur

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சபரிநாதன் (வயது 30). இவர் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், சுரேஷ்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று ஊரிலுள்ள அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

திருவிழா முடிந்து இரவு எட்டு மணியளவில் பூதாமூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது பாண்டியன், சுரேஷ்குமார் மற்றும் கூட்டாளிகள் சிலர் சபரிநாதனை வழிமறித்து கழுத்திலும், வயிற்றிலும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் சபரிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனடியாக சடலத்தை மீட்டு விருத்தாசலம் காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisment

இந்த கொலை சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.