மதுரையில் இரண்டு வயதுக்குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரம் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அகற்றப்பட்டது.
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள மணி நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது இரண்டுவயதுமகள் அஸ்வினி பாத்திரங்களை வைத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது எதிர்பாராத விதமாகப் பாத்திரம் ஒன்றில் குழந்தையின்தலையானது சிக்கிக் கொண்டது. அக்கம் பக்கத்தினர் எவ்வளவு போராடியும் பாத்திரத்தைக் குழந்தையின் தலையிலிருந்து எடுக்க முடியாததால் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தமீட்புத் துறையினர், குழந்தையின் தலையிலிருந்தபாத்திரத்தைபல்வேறு முறைகளில்எடுக்க முயன்றும் பயனளிக்காத நிலையில் இறுதியில் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாத்திரத்தை வெட்டி குழந்தையை மீட்டனர்.