அண்மையில் ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ளதை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திடம் இது தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்குப் பதில் அளித்த பா.ரஞ்சித், ''இதை நான் எதிர்க்கிறேன். ரொம்ப தவறானது. ஆளுநருக்கு இவ்வளவு அதிகாரமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லது தமிழக மக்கள் விரும்புகிற ஒரு உணர்வைத் திருப்பி அனுப்புவது என்பது தமிழக மக்களுக்கு முழுவதும் எதிரானது என்று நான் பார்க்கிறேன்'' என்றார்.