
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி கோவை, நெல்லை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 19 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப்பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us