அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு நாளை (11/07/2022) ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளைய தினம் அதிமுகவின் அரசியலில்முக்கிய தினமாக இருக்கப்போகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.