The shame of the Tamil Nadu government

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வந்திருக்கும் தீர்ப்பு எடப்பாடி முகத்தில் கரியைப் பூசி இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisment

அண்மையில் மூடப்பட்ட தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையை மீண்டும்திறப்பது தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருந்தது. இது குறித்து தங்கள் தரப்பு பதில்களை அளிக்குமாறு தமிழக அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ம.தி.மு.க. தலைவர் வைகோவும் இதுகுறித்து தனது எதிர்ப்பை ஆணையத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே தருண் அகர்வால் கொடுத்த அறிக்கையின்படி ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அழைத்து பேசாமல் தமிழ்நாடு அரசு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையை மட்டும் ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது செல்லாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்துதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பது தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் உச்சகட்ட அவமானம்.கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தியபோது உதாசீனப்படுத்திய எடப்பாடியின் முகத்தில் இத்தீர்ப்பு கரியைப் பூசி இருக்கிறது. தமிழக அரசே, இனியாவது திருந்தி கொள்கை முடிவெடுங்கள்! என பதிவிட்டுள்ளார்

.