A verb derived from mosquito; A 71-year-old man was seriously injured

கொசுவர்த்தியின் கனல் பட்டு தீப்பிடித்ததில்தீயில் சிக்கி 71 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் தைலாஞ்செட்டியார் (71). இவரது மனைவி ராஜம்மாள்(70). தைலாஞ்செட்டியார் தினமும் இரவு வீட்டின் முன் பகுதியில் தூங்குவது வழக்கம். அதைப்போல் நேற்று இரவும் வீட்டு முன்பு தூங்கினார்.

Advertisment

அப்போது கொசுவர்த்திபற்ற வைத்து அதன் அருகில் படுத்துத்தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 11.50 மணி அளவில் அவர் போர்த்தி இருந்த போர்வையின் மீது எதிர்பாராத விதமாக கொசுவர்த்தியின் கனல் பட்டு தீப்பிடித்து விட்டது. போர்வை முழுவதும் தீப்பற்றிவிட அதில் சிக்கிய அவரின்அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள்வெளியே ஓடி வந்து பார்த்தபோது அவர் தீ விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடும் நிலையில் இருந்துள்ளார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுபின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.