Advertisment

வேணு சீனிவாசனை 6 வார காலம் கைது செய்ய தடை!

co

Advertisment

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் புணரமைப்பு மற்றும் கும்பாபிஷேக முறைகேடு தொடர்பாக முன் ஜாமீன் கோரி டி.வி.எஸ். நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனையும் எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார். இதுபற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, அவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வேணு சீனிவாசன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தன் நிறுவனத்தின் சார்பில் தமிழகம், கர்நாடகா கேரளாவில் 100க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 2004ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது அமைக்கப்பட்ட திருப்பணிக் குழுவில் தன்னை உறுப்பினராக சேர்த்திருந்ததாகவும், அக்கோவிலுக்கு தன் சொந்த பணத்தில் 70 லட்சம் ரூபாய் செலவில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த திருப்பணி குழுவில் மற்றொரு உறுப்பினரான அப்பல்லோ குழும தலைவரும் இருந்ததாகவும், அவர் மேற்பார்வையிலேயே திருப்பணிகள் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாக அறங்காவலர் என்ற முறையிலும், 2015 ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது திருப்பணிக்குழு தலைவர் என்ற முறையிலும், 25 கோடி ரூபாய்க்கு சொந்தபணத்தில் கோவில் வளாகம் முழுக்க சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது, மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருப்பணி, புணரமைப்பு தொடர்பான வழக்கில் தன்னை காவல் துறையினர் சேர்த்துள்ளதாக யானை ராஜேந்திரன் வழக்கில் தெரிவித்துள்ளதாலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்யக் கூடும் என்பதாலும் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது டிவிஎஸ் வேணு சீனிவாசனை 6 வார கால கைது செய்ய கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe