Skip to main content

கர்ப்பிணி உள்ளிட்ட 7 பேரை கடித்த விஷ வண்டுகள்; சிதம்பரத்தில் பரபரப்பு

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Venomous insect that bit 7 people including a pregnant woman; There is excitement in Chidambaram

 

சிதம்பரம் அடுத்துள்ள தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விஷ வண்டு(கதண்டு) கடித்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

சிதம்பரம் அருகே தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமக்குளம் தச்சன் தெருவில் இன்று (29.03.2023) விஷ வண்டுகள் கூட்டமாக பறந்து வந்துள்ளன. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விஷ வண்டுகள் பறந்து வருவதைப் பார்த்து அங்குமிங்கும் ஓடினர். தெருக்களிலும் வீடுகளிலும் சாலைகளிலும் ஓடிய பொதுமக்களைக் கொட்டின. இதில் 7 பேருக்கு தலை மற்றும் உடலின் பல பகுதியில் வண்டுகள் கொட்டியதால் வலி ஏற்பட்டு துடித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் வலியால் துடித்தவர்களை சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதில் ஓமக்குளம் தச்சன் தெருவைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான ஆர்த்தி (23), வளர்மதி (34), தியாகராஜன் (38), புவனேஸ்வரி (31) மற்றும் கமலா, வனிதா, மதன் ஆகிய 7  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஓமக்குளம் தச்சன் தெருவில் உள்ள புளியமரத்தில் 200-க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளன. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

 

இந்த சம்பவம் குறித்து பேசிய சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன், புளியமரத்தில் உள்ள விஷ வண்டுகளை தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. 

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story

விமரிசையாக நடைபெற்ற நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் திருவிழா

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Nataraja Temple Arudra Chariot Festival held critically

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மார்கழி ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை ஐந்து மணிக்கு சாமி, கோவில் கருவறையிலிருந்து தேருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. இதில் விநாயகர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன் உள்ளிட்ட தேர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரம் கால் மண்டபத்திற்கு சாமிகளை எடுத்துச் சென்று மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து நாளை மதியம் 3 மணிக்குள் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். காவல்துறை பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட ஏற்படாத வகையில் தீவிர காவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.