வெண்மணி தியாகிகள் சுடருக்கு வரவேற்பு

கீரமங்கலத்தில் வெண்மணி தியாகிகள் சுடருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு தூத்துக்குடியில் 17ந் தேதி முதல் 20ந் தேதி வரை நடக்கிறது. மாநாட்டுக்காக வெண்மணியில் கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதால் எரித்துக் கொள்ளப்பட்ட தொழிலாளிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வெண்மணி நினைவு திடலில் இருந்து புதன் கிழமை காலை வெண்மணி தியாகிகள் சுடர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த சுடருக்கு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கும் பொதுக் கூட்டம் நடந்தது.

வெண்மணி சுடருக்கு வரவேற்பு அளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டம் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் வடிவேல் தலைமையில் மாநிலக்குழு சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் கவிவர்மன், முன்னால் எம்.எல்.ஏ ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நகரச் செயலாளர் வேலரசன் வரவேற்றார்.

venmani sudar

தியாகச் சுடரை முன்னால் எம்.எல்.ஏ மாரிமுத்து, மாநிலக்குழு பொன்னுதாய் ஆகியோர் தலைமையில் கொண்டுவரப்பட்டதை புதுக்கோட்டை மாவட்டத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் மாநிலக்குழு சின்னத்துரை பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் விளை பொருட்களைக் கூட சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் வாகன சோதனை என்ற பெயரில் வசூல் செய்யப்படுவதால் விவசாயிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு விரோதமாக செயல்படுவதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று பேசினார்.

-பகத்சிங்

Venmani Martyrs Marxist Communist Party Pudukkottai district keramangalam
இதையும் படியுங்கள்
Subscribe