Advertisment

வேங்கைவயல் விவகாரம்; பணிக்கு வராத முரளி ராஜா

vengaivayal issue; Murali Raja who did not come to work

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையில் மூன்று நபர்கள் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் அரசு தரப்பில் அறிவியல் சாட்சியங்கள் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேநேரம் வேங்கைவயல் பகுதிக்குள் போராட்டங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் ஊருக்குள் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேங்கை வயல் கிராமத்தில் இறந்த மூதாட்டியின் உடலைப் பார்க்க உறவினர்கள் வருவதற்கு போலீசார் தடை விதிப்பதாக தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் மூதாட்டியின் உடலை நடு சாலையில் வைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று நபர்களில் ஒருவரான முரளிராஜாவின் பாட்டி கருப்பாயி வயது முதிர்வு காரணமாக இன்று மதியம் 12 மணியளவில் காலமானார். வேங்கைவயலுக்குள் நுழையும் அனைத்து பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். துக்கத்திற்கு உறவினர்கள் வருவதற்கு, பந்தல், மைக் செட் ஆகி அமைப்பதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதாக மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உடலை நடுசாலையில் வைத்துவிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றப்பத்திரிக்கையில் தன் பெயர் உள்ளதை அறிந்த மணமேல்குடி காவல் நிலைய காவலர் முரளிராஜா கடந்த அடுத்த நாட்களில் இருந்து இன்று 30 ந் தேதி வரை காவல் நிலையத்திற்கு பணிக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

police vengaivayal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe