Advertisment

வேங்கைவயல் விவகாரம்; 8 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு

vengaivayal issue dna test collection

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இது குறித்த வழக்கில் கடந்த 1 ஆம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்றது. அப்போது அவர்கள் 8 பேரும் ஆஜராகி டிஎன்ஏ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்திருந்தனர்.

இதையடுத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி 8 பேரையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுடிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள இன்றுரத்த மாதிரிகளை வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் டிஎன்ஏபரிசோதனைக்கு மறுத்த 8 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று வந்திருந்தனர். இதையடுத்து 8 பேரிடம் இருந்தும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த ரத்த மாதிரியை அங்கிருந்து சென்னையில் உள்ள ஆய்வகத்திற்குசிபிசிஐடி போலீசார் அனுப்பி வைக்க உள்ளனர்.

CBCID hospital vengaivayal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe