ADVERTISEMENT

நிறுத்தப்பட்ட எரிபொருள் கொள்முதல்; போராட்டத்தில் குதித்த விற்பனையாளர்கள்

04:18 PM May 31, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் கலால் வரியைக் கடந்த 21ம் தேதி மத்திய அரசு தலா 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை குறைத்தது. இதனால் சில்லறை விற்பனையாளர்களுக்கு வரி செலுத்தி வாங்கி வைத்திருக்கும் சரக்குகளால் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த தொகையை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கக் கோரி இன்று தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் அகில இந்திய அளவில் ஒரு நாள் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கரூர், திண்டுக்கல், சேலம், மதுரை, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 500 டேங்கர் லாரிகளில் சில்லறை விற்பனைக்காக பெட்ரோல், டீசல் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆயில் நிறுவனங்களுக்குச் சொந்தமான டேங்கர் லாரிகளுக்கு மட்டும் எரிபொருள் நிரப்பப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், பெட்ரோல் நிலையங்களுக்குச் சொந்தமான டேங்கர் லாரிகள், ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் டேங்கர் லாரிகள் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. டெர்மினலுக்கு முன்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த நிர்வாகிகளும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT