Advertisment

"தள்ளாடியபோது தாங்கிப்பிடித்தவர்கள் வேலுமணியும், தங்கமணியும்" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு!

admk minister rajendrabalaji

கோவை மாவட்டம் தேவராயபுரத்தில் நேற்று முன்தினம் நடத்தியதிமுக கிராமசபைக் கூட்டத்தில், அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்ணை நோக்கி 'நீங்கள் அமைச்சர் வேலுமணி அனுப்பிய நபர் தானே' எனதிமுகதலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினர். பின்னர் அந்தப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபடச் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. இந்தச் சம்பவத்தை அடுத்து திமுகதலைவர் ஸ்டாலினுக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கும் வார்த்தைப்போர் நீடித்தது.

Advertisment

"எல்.இ.டி பல்ப்வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதை நிரூபித்தால் அமைச்சர்வேலுமணி அரசியலை விட்டு விலகத் தாயாரா?" எனஸ்டாலின் கேள்வியெழுப்பியிருந்தார்.அதேபோல்செய்தியாளர்களைச் சந்தித்தஅமைச்சர் வேலுமணி, "பட்டியல் இனப்பெண் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது. ஸ்டாலின் மக்கள்சபைக் கூட்டம் நடத்துகிறார்.அதுவும்2,000 ஆண்டு பழமையான கோவிலை மறித்துக் கூட்டம் போட்டுள்ளார்கள். கேள்வி கேட்கும்பொழுது பொறுமையாகப் பதில் சொல்லலாம். ஆனால், அதற்காக கட்சிக்காரர்களைவிட்டு தாக்கவைத்தது மிகவும் தவறு" எனக்கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில், கோவையில் அதிமுக விழா ஒன்றில் பேசியபால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ''அதிமுகவிற்கு சோதனை வந்த நேரத்தில், ஜெயலலிதாஇறந்த நேரத்தில், ஆட்சி சின்னாபின்னாமாகிவிடுமோ எனஅதிமுகவே தள்ளாடியநேரத்தில், ஆட்சியை அமைப்பதற்கு ஊன்றுகோளாக இருந்து தாங்கிப்பிடித்தவர்கள்வேலுமணியும், தங்கமணியும். எனவே இவர்களின் மக்கள் செல்வாக்கைதகர்ப்பதற்கு என்ன வழியென்று சொல்லிகோவை தொண்டாமுத்தூரில்வந்து களமிறங்கியிருக்கிறார்கள்" எனப் பேசினார்.

stalin thangamani velumani rajendra balaji admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe