t

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் ஆங்காங் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ரெடிமேட் நிறுவனம் உள்ளது. பழைய வாணியம்பாடி சாலையில் 3 கட்டிடங்களில் பெரிய அளவில் ஜவுளி வியாபாரம் நடக்கிறது. ஆம்பூரில் பிரபலமான இந்த ஜவுளிக்கடையை பழனியப்பா என்பவரும், அவரது மகன்களும் நடத்தி வருகின்றனர். இந்த துணிக்கடைக்குள் இன்று பிப்ரவரி 11ந்தேதி மதியம் 3 கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்தனர்.

Advertisment

திருவண்ணாமலை, சென்னையில் இருந்து வந்திருந்த 10 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த துணிக்கடை, இந்த துணிக்கடையின் உரிமையாளர் வீடு போன்றவற்றில் அதிரடியாக ஆய்வு செய்துவருகின்றனர்.

Advertisment

வருமானத்தை மறைத்ததாகவும், அதனால் இந்த ரெய்டு எனவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால் வணிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.