v

கோடைக்காலமே இன்னும் தொடங்கவில்லை, அதற்குள் குடிக்க தண்ணீர் இல்லையென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளார்கள் மக்கள்.

Advertisment

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு ரகமதாபாத் பகுதி. இந்த பகுதியில் உள்ள தெருக்களில் உள்ள நகராட்சி குழாய்களில், வீடுகளில் உள்ள நகராட்சி குடிநீர் குழாய் இணைப்புகளில் கடந்த இரண்டு மாதமாக தண்ணீர் வரவில்லை. இதுப்பற்றி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது, நாளை வரும், வந்துவிடும் என்ற பதிலையே கூறியுள்ளனர். லாரி மூலமாகவாவது தண்ணீர் தாருங்கள், குடிக்க தண்ணீரில்லை எனக்கேட்டுள்ளனர். அதையும் செய்யக்காணோம். இதனால் கடந்த இரண்டு மாதமாக கேன் தண்ணீரை வாங்கி உபயேகித்து வந்துள்ளனர்.

Advertisment

அதுக்கூட வாங்க வசதியில்லாத ஏழைகள் தடுமாறியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் அதிகமான பெண்கள் காலி குடங்களுடன் இன்று ஜனவரி 24ந்தேதி மாலை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் வந்து சமாதானம் பேசவில்லை. அலுவலகத்துக்குள்ளும் யாருமில்லை.

v

இதனால் பாதுகாப்பிற்கு வந்துயிருந்த பேரணாம்பட்டு நகர காவல் துணை ஆய்வாளர் சிலம்பரசன் தர்ணா செய்தவர்களிடம், அதிகாரிகள் வரட்டும் நானே உங்கள் குறைகளை கூறுகிறேன் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

Advertisment

கவுன்சிலர்கள், சேர்மன் இருந்திருந்தால் இந்த கஸ்டம் நமக்கு வந்திருக்கும்மா?, அவுங்க இல்லாதது நமக்கு எவ்வளவு தொல்லை பாரு, இதுக்கெல்லாம் இந்த அரசாங்கம் தான் காரணம் என ஆளும் அதிமுக அரசை திட்டியபடி வீட்டுக்கு சென்றனர்.