Advertisment

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் ரஜினி அக்கறை காட்டவில்லை -வேல்முருகன் 

velmurugan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று கடலூரில்செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

Advertisment

குழந்தைகளுக்கு கூட தெரியும் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்கள் பற்றி, ஆனால் ரஜினிகாந்திற்கு அந்த ஏழு பேர் யார் என்பது தெரியவில்லையா? பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் யார் என்று தெரியாதது போல ரஜினி நடிக்கிறார். ரஜினி திரையில் நடிப்பது போல நடிக்கிறாரா?

பச்சை தமிழன் என்று பேசிவிட்டு தமிழகத்துக்கு என்ன செய்திருக்கிறார்? என்ன செய்யப் போகிறார் ரஜினி? ஹைட்ரோ கார்பன், மீத்தேன் விவகாரம்,விவசாயிகள் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம், மீனவர்கள் பிரச்சனை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நீட் தேர்வு என தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனைகள் எதை பற்றிக் கேட்டாலும் அவரிடம் பதில் இல்லை. அவருக்குத் தமிழ் மக்கள் படும் அவலங்கள் பற்றி தெரியாது. தமிழ் சமூகம் சினிமாக்காரர்களை நம்பி ஏமாந்தது போதும். நடிகர்கள் எதைப்பற்றியும் தெரியாமல் பதவிக்கு வர நினைக்கின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடிகர்களை எதிர்பார்க்க கூடாது. நம் தமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் அழிக்கப்படுகிறது. இதுகுறித்து கவலைப்படாத ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

tvk velmurugan velmurugan tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe