காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சுங்க சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்.

Advertisment

இற்தநிலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தகர்ப்பு வழக்கில் சென்ற மாதம் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் அவர்களின் நீதிமன்ற காவல் நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரது நீதிமன்றக்காவல் ஆஜர்ப்படுத்தப்பட்டார். மேலும் அவருக்கு வருகிற 22ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

படங்கள். அசோக்