வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா தும்பேரி கிராமம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் அரிசி கடத்துவதை ஒரு கும்பல் வழக்கமாக செய்து வந்துள்ளது. அதேபோல் ஆந்திராவில் காய்ச்சப்படும் சாராயம், அதே வழியில் தமிழகத்திற்குள் கொண்டு வந்து வேலூா மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது என அந்த கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதி இளைஞர்கள் மற்றும் மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தினர் காவல்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் தகவல் தந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z1_31.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனால் கடத்தலை தடுக்க அண்ணாநகர் பகுதியில் உள்ள மலையோரத்தில் காவல்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சோதனைசாவடியில் இரண்டு போலிஸார் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். அரிசி கடத்தல், கள்ளச்சாராயம் கடத்தல் இல்லாமல் இருந்துள்ளது.
தற்போது இந்த சோதனை சாவடியில் உள்ள காவலர்களை கவனித்துவிட்டு தொடர்ச்சியாக கடத்தலை இருசக்கர வாகனத்தில் பகலிலேயே மூட்டைகளில் அரிசி கடத்துவதை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். சோதனை சாவடி அமைக்கப்பட்டும் இப்படி நடக்கிறதே என அந்த பகுதி இளைஞர்கள் மீண்டும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் தினமும் 15 ஆயிரம் கிலோ அளவுக்கு பகலிலேயே இருசக்கர வாகனத்தில் அரிசி கடத்துகின்றனர். இரவில் சாராயம் கடத்தி வருகின்றனர். இதுப்பற்றி காவல்துறையினரிடம் நாங்கள் முறையிட்டால், தகவல் சொன்னது யார் என்பதை கடத்தல் கும்பலுக்கு தகவல் கூறிவிடுகின்றனர். அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு கொலை செய்துவிடுவோம், உயிரோடு இருக்க முடியாது என மிரட்டுகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z2_33.jpg)
அரிசி கடத்துகிறார்கள் என வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தோம், அவர்களும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால் இந்த சோதனை சாவடியில் நேர்மையான காவலர்களை பணியில் அமர்த்தி கடத்தலை தடுக்க வேண்டும், இரவும் பகலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு நேர்மையான அதிகாரிகளை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என வேண்டுக்கோள் விடுத்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அண்ணாநகரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் நடத்தப்படும் எனக்கூறியுள்ளனர்.
இப்போதெல்லாம் காவல்துறையினருக்கு கொலை, கொள்ளை, திருட்டு என எதற்காகவும் ரகசிய தகவல் தருவது என்பது குறைந்து வருகிறது. அதற்கு காரணம் இப்போது வெளியாகியுள்ளது. துப்பு தருபவர்களை பணத்துக்காக காவல்துறையினர் காட்டி தருகிறார்கள் என்றால், இவர்கள் பணத்துக்காக வேறு என்னன்ன செய்வார்கள் என கேள்வி எழுப்புகிறார்கள். அப்பகுதி மக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)