vellore

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த விருதம்பட்டில் உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் 28 வயதான சுனில். இவர் நேற்று மாலை வீட்டை விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இரவு வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் மே 10ந் தேதி காலை காட்பாடி பகுதியில் உள்ள சர்க்கார் தோப்பில் ஒருவரது உடல் இருப்பதாக காட்பாடி போலிஸாருக்கு தகவல் சென்றுள்ளது. காட்பாடி டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையில் போலிஸார் அங்கு சென்று பார்த்தபோது, அது சுனில் என அடையாளம் காணப்பட்டது.

Advertisment

Advertisment

அவரை யாரோ அடித்து கொலை செய்து அங்கு கொண்டு வந்து வீசிவிட்டு சென்று இருக்கிறார்கள்என காவல்துறை தரப்பில் முதல்கட்டமாக தகவல் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.