வேலூர் மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இன்று காலை, வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் மாவட்ட தலைவர் வேல்முருகன், ஜெகத்ரட்சகனை நேரில் சந்தித்து, இந்த தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தின் ஆதரவு திமுகவிற்குத்தான் எனக்கூறி சால்வை அணிவித்ததாக திமுக தரப்பினரிலிருந்து தகவல் வந்துள்ளன.
அதேபோல் வேலூர், ஆரணி போன்ற பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினரும் திமுகவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ரஜினி, பாஜகவின் தேர்தல் அறிக்கையிலிருந்த நதிநீர் இணைப்பை வரவேற்றிருந்த நிலையில், விஜய் மக்கள் மன்றத்தினரின் இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.