Advertisment

விபத்தில் சிக்கிய இளைஞர்கள்; தப்பி ஓடிய நண்பர்கள்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிக்நாங்குப்பம் கிராமம் ராசன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளைஞர் பரத். இவர் மே 29ந்தேதி மதியம் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு கால் வந்துள்ளது. நீங்க வீட்டுக்கு வெளியே வந்து நின்னு போன் செய்ங்க வர்றேன் என்று கூறியுள்ளான். அதன்படி சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோ வர அதில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் இருந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து வெளியே கிளம்பியுள்ளான் பரத். அவனது வீட்டில் இருந்தவர்கள் எங்கடா போற எனக்கேட்க இதோ வந்துவிடுகிறேன் எனச்சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார்.

Advertisment

sa

வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி ஆட்டோ சென்றுள்ளது. அப்போது வளையாம்பட்டு என்ற இடத்தில் பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கர்நாடகா மாநில அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர் உயிர் தப்பினர். பரத் மட்டும் படுகாயம் அடைந்துள்ளார். அப்பகுதி மக்கள் உதவியுடன் ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்த பரத்தை விபத்துக்குளான ஆட்டோவிலேயே ஏற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரத் உயிர் இழந்துள்ளார். இதனை அறிந்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். அங்கு வந்த பரத் உறவினர்களுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மே 30ந்தேதி பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் உடலை வீட்டிற்க்கு எடுத்துவந்தனர். ஊருக்கு வந்ததும், கிராம மக்களுடன் சேர்ந்து வாணியம்பாடி அடுத்த பூ மரம் கூட்டு சாலையில் பரத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், பரத்தை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பரை கைது செய்ய வலியுறுத்தியும், கூட்டு சாலையில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தை அப்புறப்படுத்த வலியுருத்தி சாலை நெடுவில் கற்கள் மற்றும் தண்டவாளங்கள் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டம் கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அந்தசாலையில் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலிஸாரின் வாக்குறுதிக்கு பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

எதற்காக அந்த ஆட்டோ ஓட்டுநர்கள், அவரது நண்பர் எதனால் அங்கிருந்து தப்பி ஓடினார்கள், அவர்கள் யார் என பரத்தின் செல்போன் வழியாக கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe