வாணியம்பாடியில் வேலூர் வடமேற்கு மாவட்டம் பாமக பொதுக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்துக் கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Advertisment

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஜி.கே.மணி, தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பாமக சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகள் தெரவித்துக் கொள்கின்றோம். இந்திய அளவில் கடந்த சில மாதங்களாக தொழில் வேகமாக நலிவடைந்து வருகிறது. தொழில் முனைவோர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளனர். ஆகவே மத்திய, மாநில அரசுகள் கூர்ந்து கவனித்து சிறு, குறு நடுத்தர தொழில்கள் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அதை ஊக்கப்படுத்துவதற்கு மானியம் வழங்க வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும்.

vellore vaniyambadi pmk jk mani meet palar river

தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகவும், அரசின் நலத்திட்டங்களை வேகமாக மக்களுக்கு சென்றடையும் வகையிலும், வேலூர் மாவட்டத்தை பிரித்தது போன்று பெரிய மாவட்டங்களான சேலம், மதுரை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.

Advertisment

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு ஆங்காங்கே தடுப்பணை கட்டி உள்ளதால் நீர் வரத்து குறைந்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழக அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாறு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார்.