வேலூர் மாவட்டத்தில் தினமும் 5 இருசக்கர வாகனமாவது திருடு போகிறது. அதன் தொடர்ச்சியாக காட்பாடி உட்கோட்டத்தில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போய்வுள்ளது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் காட்பாடி மாவட்ட துணை காவல்கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் உத்தரவின் பேரில், காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுரேஷ்குமார், ரமேஷ்குமார் ஆகிய இருவரும் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் உடனடியாக கைது செய்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TWO WHEELERS1111.jpg)
அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் படி, பதுக்கி வைத்திருந்த 26 இரு சக்கர வாகனங்களை மீட்ட காவல்துறையினர், இரு சக்கர வாகனங்கள் காணாமல் போனதாக புகார் அளித்த நபர்களை வரவழைத்து, அவர்களிடம் உள்ள ஆவணங்களை சரிபார்த்த பின்பு, வாகனங்களை ஒப்படைத்தனர்.
Follow Us