வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் பைரவா காலனி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி செல்வா. இவரின் மனைவி 19 வயதான தனலட்சுமி. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தனலட்சுமி தற்பொழுது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் செப்டம்பர் 18ந்தேதி காலை வீட்டிற்கு வந்த அவரது கணவர் செல்வா கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லையாம், பின்னர் கதவை ஒரு பக்கம் உடைத்து உள்தாழ்பாளை திறந்து உள்ளே போய் பார்த்தபோது தனலட்சுமி வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் என்பது தெரிய வந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-09-18 at 12.56.43.jpeg)
இந்த தகவல் ராணிப்பேட்டை போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் தற்கொலை செய்துக்கொண்ட தனலட்சுமியின் கணவர் செல்வாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் எங்களுக்குள் எந்த பிரச்சனையுமில்லை, எதனால் தற்கொலை செய்துக்கொண்டான்னு எனக்கு தெரியாது எனச்சொன்னதாக தெரிகிறது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தற்கொலை வழக்கை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-09-18 at 12.56.44.jpeg)
திருமணம் முடிந்து 3 ஆண்டுக்குள் அந்த பெண் இறந்தார் என்றால் சட்டப்படி கோட்டாச்சியர் அல்லது உதவி ஆட்சியர் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன்படி இந்த பெண்ணின் இறப்பு குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக உடற்கூராய்வில் கலந்துக்கொண்டு முதல் கட்ட தகவலை கேட்டுள்ளனர்.
Follow Us