வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான, ஜீ என்கிற செல்வராஜ். முன்னாள் துணை ராணுவப்படை வீரரான இவர் மீது, காதலி வீட்டாரை குடும்பத்தோடு தீர்த்துகட்ட வெடிகுண்டு வைத்திருந்த வழக்கு, மாமனாரை கொலை செய்த வழக்கு, கோயில் தேரை தீ வைத்து எரித்த வழக்கு என பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளால் சி.ஆர்.பி.எப் பில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

s

Advertisment

அப்படிப்பட்டவரை ஏப்ரல் 20 ந்தேதி இரவு 9 மணியளவில், சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் நட்டநடு சாலையில் செல்வராஜ் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்த அவ்வழியாக சென்ற மக்கள் அலறியடித்து ஓடினர். அந்த பகுதியில் இயங்கிய கடைகள் அவசரமாக மூடிவிட்டு வியாபாரிகள் கிளம்பினர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக அந்த பகுதிக்கு சத்துவாச்சாரி போலீஸார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதன்பின்னர், ஜீ’ யை யார் வெட்டியது, எத்தனைப்பேர் வெட்டினார்கள், எதற்காக வெட்டியிருப்பார்கள் என போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். வேலூர் மாநகரில் அடிக்கடி ரவுடிகள் கொல்லப்படுவது வாடிக்கையாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.