வேலூர் மாவட்டம் ஆம்பூர் மோதக பள்ளி பகுதியை சேர்ந்தவன் பரத் வர்மா. மோதகபள்ளியை அடுத்த அங்கியாபள்ளி கிராமத்தை சேர்ந்த சிவமூர்த்தி என்பவரின் 12ஆம் வகுப்பு படிக்கும் மகள் தினமும் அந்த வழியாக பள்ளிக்கு சென்று வந்துள்ளார். அந்த மாணவியை பரத் பின் தொடர்ந்து சென்று கேலி கிண்டல் செய்து காதலிக்க வேண்டும் என டார்ச்சர் செய்துள்ளான்.

Advertisment

vellore school issue

இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இதை வீட்டில் சொன்னால் பிரச்சனையாகும் என அமைதியாக இருந்தாராம் அந்த மாணவி. ஒருக்கட்டத்தில் கேலி, கிண்டல் அதிகமானதால், இதுப்பற்றி தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார் அந்த மாணவி. இதனை தொடர்ந்து மாணவி குடும்பத்தார் பரத்தை எச்சரித்துள்ளதாக தெரிகிறது. இருந்தும் தொடர்ச்சியாக அவன் கேலி, கிண்டல் செய்ய கடந்த செப்டம்பர் 6 ந்தேதி, பரத்தை தங்களது கிராமத்துக்கு இழுத்து சென்ற மாணவியின் உறவினர்கள், அங்குள்ள கல் கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்த உமராபாத் காவல் நிலைய காவலர்கள் அங்கு சென்று அந்த இளைஞனை மீட்டு, அந்த பெண்ணின் தந்தை, உறவினர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

Advertisment

கல் கம்பத்தில் கட்டிவைத்து, சாதி பெயரை சொல்லி தாக்கியதாக பெண்ணின் தந்தை சிவமூர்த்தி, உறவினர்கள் கோவிந்தசாமி, குமார் ஆகியோர் மீது சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர் போலீஸார்.