Advertisment

புதிய எஸ்.பிக்கு வாழ்த்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்!

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உயரதிகாரிகளை ஒவ்வொருவராக மாநில அரசு நியமித்து வருகிறது. இதில் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் கடந்த, நவம்பர் 17ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

Advertisment

vellore ranipet district police commissioner mayilvaganam meet dmk mlas

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள மயில்வாகனத்தை, ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி அமைப்பாளருமான ஈஷ்வரப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment

இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு நகரங்களில் நடைபெறும் சில சட்ட விரோத செயல்கள் குறித்தும் அவரிடம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளதாக திமுக வட்டாரங்களில் இருந்து தகவல் கூறுகின்றனர்.

dmk mlas new sp mayilvaganam ranipet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe