Skip to main content

புதிய எஸ்.பிக்கு வாழ்த்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உயரதிகாரிகளை ஒவ்வொருவராக மாநில அரசு நியமித்து வருகிறது. இதில் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் கடந்த, நவம்பர் 17ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 

vellore ranipet district police commissioner mayilvaganam meet dmk mlas


இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள மயில்வாகனத்தை, ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான காந்தி, ஆற்காடு  சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி அமைப்பாளருமான ஈஷ்வரப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு நகரங்களில் நடைபெறும் சில சட்ட விரோத செயல்கள் குறித்தும் அவரிடம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளதாக திமுக வட்டாரங்களில் இருந்து தகவல் கூறுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'காமராஜருக்கு நடந்த நிகழ்வு எனக்கும் நடந்தது'- பரப்புரையில் முதல்வர் சொன்ன சுவாரஸ்யம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'What happened to Kamaraj also happened to me' - the chief minister said interestingly in the lobby


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

பரப்புரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். வெள்ள நிவாரணம் கேட்டால் தரமாட்டார். தமிழ்நாட்டை வெறுக்கின்ற பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக போகிறவர் நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கின்ற பண்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக நிற்பவருமாக இருப்பார்.

இன்று காலையில் நான் பெருமை கொள்ளக்கூடிய ஒரு செய்தியை சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். நம்முடைய திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்று கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த திட்டம் எப்படி உருப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜர் மத்திய உணவு திட்டம் கொண்டு வந்ததற்கு காரணமாக ஒரு சம்பவத்தை சொல்லுவார்கள். பெருந்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை சந்தித்தாராம். அங்கு காரை நிறுத்தி அவர்களை பக்கத்தில் வரச் சொல்லி 'இன்று பள்ளிக்கு போகவில்லையா?' என்று கேட்டார். அந்த பிள்ளைகள் 'எங்கள் குடும்பத்தில் உணவுக்கே வழி இல்லாததால் எங்க அப்பா அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை' என்று சொல்லவும் பள்ளியில் மதிய உணவு போட்டால் அதற்காகவாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என சிந்தித்து யோசித்து காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.

எனக்கும் அதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது. நான் முதலமைச்சரானவுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ஒரு குழந்தையை பார்த்து 'என்னம்மா சாப்பிட்டீங்களா' என்று எதார்த்தமா கேட்டேன். அந்த குழந்தை 'வீட்டில் அப்பா அம்மா வேலைக்கு போறாங்க, காலையில உணவு செய்ய மாட்டாங்க அதனால் சாப்பிடவில்லை' என்று சொன்னதும் எனக்கு மனசே சரியில்லை.

கோட்டைக்கு போனவுடனே அதிகாரிகளை அழைத்தேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரணும் திட்டத்தை தயார் பண்ணுங்கள் என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் ரொம்ப பணிவாக சார்  நம்ம நிதிநிலை ரொம்ப மோசமா இருக்கு. அதோடு இல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூட நாம் இதை சொல்லவில்லை என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன், 'வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன நம் எதிர்கால தலைமுறை குழந்தைகள் தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் படிப்பது மனதில் மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதி நிலையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்க ஃபைலை தயார் பண்ணுங்கள்' என்று சொன்னேன். அந்த ஃபைலில் கையெழுத்து போட்ட கை தான் இந்த ஸ்டாலின் கை''என்றார்.

Next Story

'உங்களுடைய கனவு பலிக்காது; உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்' - இபிஎஸ் பேச்சு!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'Your dream will not come true; We will not be afraid of rolling intimidation'-EPS speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு இன்றைக்கு  அவருக்கு ஒரு அமைச்சர் பதவியை கொடுத்து தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய அனுப்பி இருக்கிறார்கள். இது என்ன உங்கள் அப்பா வீட்டு சொத்தா? தமிழ்நாடு.

ஏன் இங்கு இருப்பவர்களில் யாரும் வரக்கூடாதா? மேடையில் இருப்பவர்கள் வரக்கூடாதா? இது ஜனநாயக நாடு மு.க.ஸ்டாலின் அவர்களே. உங்களுடைய கனவு பலிக்காது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். வாரிசு அரசியல் இங்கு கிடையாது. இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் மக்கள். போகும் பக்கம் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை சாடி பேசுகிறார். என்னைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார். அரசியலுக்கு வந்து விட்டால் எல்லா விமர்சனங்களும் தாங்கக்கூடிய சக்தி எங்களுடைய தலைவர்கள் எங்களுக்கு வழங்கிய விட்டு சென்றுள்ளார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எங்கள் தொண்டன் கூட பயப்பட மாட்டான். உங்களுடைய உருட்டல், மிரட்டல், அவதூறு பேச்சுக்கெல்லாம் அடிபணியும் கட்சி அதிமுக அல்ல''என்றார்.