முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன், தனது தந்தையின் உடல் நிலையை கவனித்துக்கொள்ள வேண்டும் எனக்கேட்டு ஒருமாதம் பரோலில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 29- ஆம் தேதி தனது தந்தையார் உடல்நிலை பாதிப்படைந்ததால், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேரறிவாளன் தனது தந்தையை அழைத்து வந்தார்.
பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், ஆஸ்துமா பாதிப்பால் அவதிபட்டு வருகிறார். இதனையடுத்து குயில்தாசனை பரிசோதித்த மருத்துவர்கள், ரத்த பரிசோதனை செய்ய அறிவுறுத்தினர். அதை தொடர்ந்து அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வந்த பேரறிவாளனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.