மணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்!

வேலூர் மாவட்டத்தில் அகரம்சேரி வழியாக செல்லும் பாலாற்றில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு மேல் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் சிலர் மணல் திருடி செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தகவல் கூறியுள்ளனர். அதேபோல் பள்ளிக்கொண்டா, வேப்பங்குப்பம் காவல்நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் முதல் கலெக்டர் வரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

 The people who fought the sand trucks

டிசம்பர் 11ந்தேதி இரவு, சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளி கடத்துகிறார்கள் என மணல் அள்ளும்போதே வருவாய்துறையினருக்கு தகவல் கூறியுள்ளார்கள் அப்பகுதி மக்கள் சிலர். காவல்துறைக்கும் சொல்லியுள்ளார்கள். யாரும் அந்த பகுதிக்கே வரவில்லையாம்.

அக்கிராம மக்கள் 50 பேர் இணைந்து மணல் கடத்திய வந்த லாரிகளை மடக்கி பிடித்து, அந்த வாகனங்கள் செல்ல முடியாதபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும் காவல்நிலையத்தில் இருந்தும், வருவாய்த்துறையினர் யாரும் வரவில்லையாம். இதுப்பற்றி எஸ்.பி அலுவலகத்துக்கு தகவல் தந்தும் யாரும் வரவில்லையாம்.

இதனால் நீண்ட நேரத்துக்கு பின் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள். யாரும் வரமாட்டாங்க, திரும்ப வண்டிய நிறுத்தனிங்க மேலே விட்டு ஏத்திவிடுவோம் என எச்சரித்துவிட்டு லாரிகளை எடுத்துக்கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியான பொதுகமக்கள், உயிருக்கு பயந்து வாழ்ந்து வருதாக தெரிவித்ததோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

people police protest Sand robbery Vellore
இதையும் படியுங்கள்
Subscribe