வேலூர் மாநகராட்சிக்குள் காட்பாடி, தாராபடவேடு, காந்திநகர் போன்ற பகுதிகள் வருகின்றன. இந்த பகுதிகளுக்கான வீட்டு வரி, தொழில் வரியை 20 முதல் 30 மடங்காக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் காரணமாகவே வரியை உயர்த்தியுள்ளதாக மாநகராட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றனர். அதாவது 50 ரூபாய் மாத வரி கட்டியவர்கள், இனி 2 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

vellore municipality corporation raised water tax and other  tax peoples strike

Advertisment

அதேபோல் மாதம் குடிநீர் கட்டண வரி இதுவரை 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. அது இனி 2400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வரி உயர்வை திரும்ப பெறக்கோரி குடியிருப்போர் நலச்சங்கள் ஒன்றிணைந்து குடியிருப்போர் நலச்சங்களின் கூட்டமைப்பு என்கிற பெயரில் அமைப்பு தொடங்கி, அதன் மூலம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தின் அருகில், கவன ஈர்ப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Advertisment

உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், சாலை அமைக்காத தெருக்களில் சாலை அமைக்க வேண்டும், பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் பூங்கா அல்லது நூலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகளையும் கூடுதலாக வைத்து போராட்டம் நடத்தினர். தங்களது இந்த கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என்று அரசுக்கு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.