வேலூர் நாடாளுமன்ற தேர்தலின் வாக்குபதிவு ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால்தேர்தலில் போட்டியிட நினைப்பவர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அதன் படி ஜூலை 17 ஆம் தேதி இன்று மதியம் 2 மணிக்கு, திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

VELLORE LOK SABHA ELECTION DMK CANDIDATE KATHIR ANAND NOMINATION FILE FOR TODAY

Advertisment

Advertisment

இதற்காக திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுக வேட்பாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை சந்தித்து மனுவை தாக்கல் செய்தார்.

VELLORE LOK SABHA ELECTION DMK CANDIDATE KATHIR ANAND NOMINATION FILE FOR TODAY

மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கதிர்ஆனந்த், திமுக இந்த மாவட்டத்துக்கு நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளது. திமுக தலைவர் தளபதியின் கடந்த கால சாதனைகள், கொள்கைகள் போன்றவை திமுகவை இங்கு வெற்றி பெற வைக்கும். நான் தேர்தல் களத்தில், வருங்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதை சொல்லி வாக்கு கேட்பேன். என்னை இந்த தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். மண்ணின் மைந்தர், அதனால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.