வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான மனுதாக்கல் ஜூலை 11 ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 18 ஆம் தேதி வரையிலான 7 நாட்கள் மனுதாக்கல் நடைபெற்றது. ஜூலை 18 ஆம் தேதி மதியம் 3 மணியோடு மனுதாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்தது. திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மனுதாக்கல் செய்துயிருந்தனர். இந்த தேர்தலில் தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டது. பிரதான கட்சிகள் எனப்பார்த்தால் திமுக, அதிமுக சின்னத்தில் ஏ.சி.சண்முகம் மட்டுமே போட்டியிடுகின்றனர். 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுயிருந்தது.

Advertisment

50 மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக தரப்பினர் திரளாக கலந்துக்கொண்டுயிருந்தனர். ஏ.சி.சண்முகம் மனுவை பரிசீலனை செய்த போது, புதிய நீதிக்கட்சி என்கிற தனியான கட்சியின் தலைவர் எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என கேள்வி எழுப்பினர் திமுக வேட்பாளர் உட்பட சில சுயேட்சை வேட்பாளர்கள். அதிமுக கட்சி தலைமையின் ஒப்புதல் கடிதத்துடன் தான் போட்டியிடுகிறார் எனச்சொல்ல, அப்போ அதற்கான கடிதம் எங்கே, இவர் புதிய நீதிக்கட்சியில் இருந்து விலகியதற்கான கடிதம் எங்கே என கேள்வி எழுப்பினர். இதனால் இவரது வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisment

vellore lom sabha election dmk and admk

திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மனுவை பரிசீலனைக்கு எடுத்த போது, ஏ.சி.சண்முகத்தின் சார்பில் வந்தவர்கள், தேர்தலில் பணம் தந்தார் என்கிற குற்றச்சாட்டு உள்ளவர் எப்படி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார் என கேள்வியை எழுப்பினர். இதே கேள்வியை சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் எழுப்பினார். இருதரப்பும் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரத்திடம் முறையிட்டனர். இறுதியில் ஒரு வழியாக சில சட்ட விதிகளை காட்டி இருவரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட 36 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ள ஏ.சி.சண்முகம் மற்றும் மாற்று வேட்பாளர்கள் வாபஸ் பெற்ற பின் இதன் எண்ணிக்கை இன்னும் குறையும். மனுக்களை திரும்ப பெற ஜூலை 22 ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.சி.சண்முகம் தரப்பில், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்ய வைக்க நினைத்தார் இதனை அறிந்தே ஏ.சி.சண்முகம் மனுவை தள்ளுபடி செய்ய வைக்க நாங்கள் எதிராட்டம் ஆடினோம். இதனை அவர் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் திமுக தரப்பில். திமுகவின் எதிர்ப்பு சண்முகம் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.

Advertisment

vellore lom sabha election dmk and admk

இந்த குழுவை பார்த்து அதிமுக தரப்பில் எப்படியாவது இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்கிற வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் தான் பிரமாண்ட குழு அமைத்துள்ளது என்கிறார்கள். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்தனர், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களாகினர். அந்த தோல்வி பயத்தால் அந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் பொறுப்பாளர்களாக இரண்டு முக்கிய தலைவர்களை நியமித்துள்ளார்கள் என்கிறார்கள்.