Advertisment

வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் பிரச்சார வாகனம் பறிமுதல்!

வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்கு கேட்டு ஒலிபெருக்கி மூலம்பிரச்சார வாகனங்கள் பல தொகுதியில் வலம் வருகின்றன. பிரச்சார வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும்மென்றால் அந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள உதவி தேர்தல் அலுவலர்களிடம் அனுமதி பெற்ற பிறகே பிரச்சார வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

Advertisment

VELLORE LOK SABHA ELECTION ADMK CANDIDATE AC SHANMUGAM ELECTION CAMPAIGN VAN SEIZURE

இந்த விதியை கண்டுக்கொள்ளாமல் ஆளும் கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறோம், ஆளும் கட்சி என நினைத்து கொண்டு அனுமதி பெறாமல் சில பிரச்சார வாகனங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன என ஆம்பூர் தாலுக்கா தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி ஆம்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்த போது, அந்த வாகனம் அனுமதி பெறாமல் இயங்கியதை அறிந்து தேர்தல் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

ELECTION COMMISSION OFFICERS VAN SEIZURE admk candidate ac shanmugam 17 LOK SABHA ELECTION vellore district Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe